பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை 2022 போட்டிக்கான இந்திய அணியை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் அறிவித்துள்ளார்..
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் கடந்த 16ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல் கட்டமாக தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், நாளையுடன் முடிவடைகிறது 8 அணிகள் பங்கேற்றுள்ள தகுதி சுற்று போட்டிகள் முடிவடையும் நிலையில், அதிலிருந்து முதல் 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும்.. அதன் பிறகு பிரதான சூப்பர் 12 சுற்று 22ஆம் தேதி நியூசிலாந்து – ஆஸ்திரேலியா மோதலுடன் தொடங்குகிறது. அதன்பின் அடுத்த நாளான 22 ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டிக்காக இந்தியா உட்பட உலக கிரிக்கெட் ரசிகர்கள் வெயிட்டிங்கில் இருக்கின்றனர்.
இந்தியா – பாகிஸ்தான் போட்டி குறித்து பலரும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பல்வேறு விதமான கருத்துக்களை கூறி வருகின்றனர். மேலும் இந்திய அணியின் ஆடும் 11 குறித்தும் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தெரிவித்து வரும் நிலையில், முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் பாகிஸ்தானுக்கு எதிராக தனது ஆடும் 11 இந்திய அணியை அறிவித்துள்ளார்..
அதன்படி அக்டோபர் 23-ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை 2022 போட்டிக்கான இந்திய அணியின் ரோஹித் சர்மா, கே.எல். ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோரை முதல் 4 வீரர்களாக அறிவித்தார். மேலும் ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர் குமார் மற்றும் முகமது ஷமி ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.
ஹர்பஜன் சிங் தனது 11 அணியில் ரிஷப் பண்ட்டை தவிர்த்து உள்ளார். முன்னதாக அணியில் ஒரு இடது கை பேட்டர் அவசியம் என்பதால் பண்ட் அணிக்கு மிக அவசியம் என முன்னாள் வீரர் ரெய்னா கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி :
ரோஹித் சர்மா (கே), கே.எல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ஆர் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி.
காத்திருப்பு வீரர்கள்: முகமது சிராஜ், ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய், ஷர்துல் தாக்கூர்.