லாரியும் வேனும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் ஓட்டுநர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலத்தில் இருக்கும் தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு தாளவாடியில் இருந்து ஒரு லாரி புறப்பட்டது. இந்த லாரி திம்பம் மலைப்பாதையின் 20-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த வேனும், லாரியும் நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் வேனின் முன் பகுதி சுக்கு நூறாக நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக வாகனத்தின் ஓட்டுநர்கள் உயிர் தப்பினர். இருவரும் சாலையில் இறங்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்ற விபத்துக்குள்ளான வாகனத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.