நாடு முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடும் பண்டிகை என்றாலே அது தீபாவளி பண்டிகை தான். பள்ளி, கல்லூரிகள் முதல் தொழில் நிறுவனங்கள் வரை அனைத்திற்கும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு தொடர் விடுமுறைகள் அளிக்கப்பட்டு விடும். இதனால் அனைவரும் தங்கள் சொந்த ஊர்களுக்கும், உறவினர்களை காண்பதற்கு வெளியூர்களுக்கு அதிக அளவில் பயணங்களை மேற்கொள்வார்கள். இதனால் அனைத்து பொது போக்குவரத்துகளிலும் கூட்டம் அலைமோதும். இட நெருக்கடியை தவிர்ப்பதற்காக மக்களின் பயண வசதிக்காக அரசு கூடுதலாக சிறப்பு பேருந்து மற்றும் ரயில் இயக்குவது வழக்கம்.
அதன்படி நடப்பு ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 24ஆம் தேதி வர உள்ளது. இதனை முன்னிட்டு சென்னையில் இருந்து முக்கிய நகருக்கு செல்லும் ரயில்களில் புக்கிங் நிரம்பிவிட்டது. ஆம்னி பேருந்துகளின் விலை மும்மடங்காக உள்ளதால் மக்கள் அரசு பேருந்துகளை புக் செய்து வருகின்றனர். அதன்படி இன்று 2100 பேருந்துக்கள் வெளியூர் செல்ல இயக்கப்படும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் பயணிகள் நிலையை புரிந்து கொண்டு 250 பேருந்துகள் கூடுதலாக இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் கோயம்பேடியில் இருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.