Categories
மாநில செய்திகள்

BREAKING: இன்று முதல் தமிழகம் முழுவதும் அமல்…. இனி இதற்கெல்லாம் அபராதம்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழக முழுவதும் புதிய மோட்டார் வாகன சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.இதன்படி லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் 500 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை, தலைக்கவசம் அணியாவிட்டால் ஆயிரம் ரூபாய், சிக்னலை மதிக்காமல் சாலையை கடப்பவர்களுக்கு 500 முதல் 1500 ரூபாய், பொது இடங்களில் வாகனங்களை ஆபத்தான முறையில் நிறுத்திவிட்டு சென்றால் ஆயிரம் முதல் 100 ரூபாய் வரை,அதிகாரிகளிடம் தவறான தகவலை அளித்தால் 2000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதேசமயம் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் அவசர உறுதிகளுக்கு வழி விடாத வாகன ஓட்டிகளுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் சரக்கு ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம், தொலைபேசியை உபயோகித்து ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டினால் பத்தாயிரம் ரூபாய்,இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் 2000 ரூபாய் மற்றும் தேவையில்லாமல் ஹாரன் ஒழிப்பவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராத விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |