Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : குசால் மெண்டிஸ் அதிரடி அரைசதம்…. 163 ரன்களை சேஸ் செய்யுமா நெதர்லாந்து?

டி20 உலகக்கோப்பை கடைசி தகுதிச்சுற்று போட்டியில் இலங்கை அணி 163 ரன்களை நெதர்லாந்து அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.

2022 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையின் 9வது தகுதிச்சுற்று போட்டியில் நெதர்லாந்து – இலங்கை அணிகள் இன்று இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் ஜீலாங்கில்விளையாடி வருகிறது .. நடப்பு ஆசியக் கோப்பை சாம்பியனான இலங்கை அணி  ஐக்கிய அரபுக்கு எதிராக கடந்த போட்டியில்  அபார வெற்றி பெற்றதை தொடர்ந்து சூப்பர் 12 கட்டத்தில் இடம்பிடிக்கும் நம்பிக்கையை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.

நமீபியாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்த பிறகு, இலங்கை அணி தடுமாறியது. இருப்பினும், தசுன் ஷனக தலைமையிலான அணி மீண்டு வந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிரான தகுதி சுற்று போட்டியில் ஆதிக்கம் செலுத்தியது. மறுபுறம், நெதர்லாந்து அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் நமீபியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றதன் மூலம் முதலிடத்தில் இருக்கிறது. அக்டோபர் 22ஆம் தேதி சனிக்கிழமை தொடங்கும்  சூப்பர் 12 சுற்றில் தங்கள் இடத்தை உறுதிப்படுத்திக் கொள்ள ஆயத்தமாக உள்ளது.

இப்போட்டியில் காயமடைந்த சமீரா மற்றும் பிரமோத் ஆகியோருக்கு பினுரா மற்றும் லஹிரு குமாரா ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் டாஸ் வென்ற கேப்டன் தசுன் ஷானகா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக வரும் பதும் நிசாங்கா -குசால் மெண்டிஸ் ஆகியோர்  களமிறங்கினர். இதில் பதும் நிசாங்கா 14 ரன்களில் அவுட் ஆனார். அதன்பின் வந்த தனஞ்செய டி சில்வா டக் அவுட் ஆகி வெளியேறிய நிலையில், குசால் மெண்டிஸ் மற்றும் அசலங்கா ஆகியோர் ஜோடி சேர்ந்து பொறுப்பாக  விளையாடினர்.

அதன் பின் அசலங்கா 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தபோதிலும், துவக்க வீரர் மெண்டிஸ் அரைசதம் கடந்தார்.. அதனை தொடர்ந்து வந்த பானுக ராஜபக்சே 19, கேப்டன் தசுன் ஷானகா 8 என அவுட் ஆகினர். கடைசி லாஸ்ட் ஓவரில் 44 பந்துகளில் (5 சிக்ஸர், 5 பவுண்டரி) 79 ரன்கள் எடுத்து அதிரடியாக ஆடி வந்த குசால் மெண்டிஸ் அவுட் ஆனார்.. இறுதியில் 20 ஓவர் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட் இழந்து 162 ரன்கள் குவித்தது. வனிந்து ஹசரங்கா 5, கருணாரத்னே 2 ரன்னிலும் அவுட் ஆகாமல் கடைசி வரை இருந்தனர்.. நெதர்லாந்து அணியில் அதிகபட்சமாக பாஸ் டி லீட் மற்றும் பால் வான் மீகெரென் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.. இதையடுத்து 163 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கி ஆடிவருகிறது நெதர்லாந்து அணி..

 

 

Categories

Tech |