தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனதுகென்று ஓர் ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். இவர் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகர் ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மாத இறுதிக்குள் இதன் முழு படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் அஜித்தின் துணிவு திரைப்படம் வெளியாகிறது. அது மட்டுமில்லாமல் பொங்கலுக்கு தெலுங்கில் பிரபாஸ் நடிப்பில் உருவான ஆதிபுருஷ் திரைப்படமும் வெளியாகிறது. எனவே வாரிசு படத்துடன் மிகப்பெரிய படங்கள் வெளியாவதால் இப்படத்தின் வசூல் பெரிதும் பாதிக்கப்படும் என்று கருத்து நிலவி வருகிறது. இதனால் தயாரிப்பாளர் தில் ராஜு நஷ்டத்தை சந்திக்க நேரிடுமோ என்ற கலக்கத்தில் இருப்பதாக தகவல் வெளியானது. தில் ராஜு மிகப்பெரிய பொருட் செலவில் வாரிசு படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தின் மூலம் அதிக லாபம் ஈட்டலாம் என்று எண்ணியிருந்தார். ஆனால் வாரிசு படத்துடன் அஜித்தின் துணிவு பிரபாஸின் ஆதிபுரூஷ் மோத இருப்பதால் கண்டிப்பாக வசூல் பாதியாக குறையும். இதனால் கடும் அப்செட்டில் வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.