விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரலமான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் மக்களுக்கு அதிகமாக பரிச்சயமில்லாதவர்களாக உள்ளனர். இதனால் இந்த சீசனை ரசிகர்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். தற்போது மைனா நந்தினி வைலட் கார்ட் என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக உள்ள ஜி.பி.முத்து சோசனஷியல் மீடியா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.ஸ டிக் டாக் மூலம் பிரபலமான இவர் அதன் தடைக்கு பின்னர் யூடியூப் பக்கம் கரை ஒதுங்கினார் சோசியல் மீடியாவில் இவர் லெட்டர் படிக்கும் வீடியோக்கள் மிக பிரபலம். அதற்கென்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
தற்போது ஜி.பி.முத்து இரண்டாவது வாரத்தில் வீட்டின் தலைவராகியுள்ளார். இவரின் ஒவ்வொரு செயலும் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்து சில நாட்களாகவே டல்லாக இருந்த ஜி.பி. முத்து தற்போது தன்னால் முடியவில்லை என்றும் ஒரு மாதிரியாக இருப்பதாகவும் கேமரா முன் பேசி உள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தன்னுடைய தம்பிகள் ஆனந்த், மணியிடம் பேச வேண்டும் என கூறியுள்ளார். இந்த வீடியோ பார்த்த உடனே ஏதாவது பண்ணுமாறும், பிக்பாஸ் வீட்டுக்குள் வரும்போது தான் சொல்லி விட்டு சென்றதாகவும் பேசியுள்ளார். இதனால் ஜி.பி.முத்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளார் என்று இணையதளத்தில் செய்திகள் பரவி வருகிறது. இந்த தகவலால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர் வீட்டை விட்டு வெளியேறக் கூடாது என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் தன்னுடைய குடும்பத்தினரும் பேசவிட்டால் சரியாகி விடுவார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
🥺🥺🥺🤞🥺🥺😔😢 Thalaiva#GPMuthu #GPMuthuArmy #BiggBossTamil6 #BiggBossTamil #BiggBoss https://t.co/33DGJ1ZzjW
— Dr Kutty Siva (@drkuttysiva) October 19, 2022