Categories
மாநில செய்திகள்

அப்படி போடு! தீபாவளியில் பள்ளிகளுக்கு “EXTRA விடுமுறை”?…. இனி மாணவர்களுக்கு செம ஜாலிதான்…..!!!!

தமிழகத்தில் வருகிற அக்டோபர் 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்பட இருக்கிறது. இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக பயணத்தை இப்போதிருந்தே திட்டமிட ஆரம்பித்துள்ளனர். இந்த வருடம் தீபாவளி பண்டிகையானது திங்கட்கிழமை வர இருக்கும் நிலையில், அதற்கு முந்தைய சனி மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்களுமே விடுமுறை தான். இந்த 3 நாட்கள் விடுமுறையை முன்னிட்டு பொதுமக்கள் வெள்ளிக்கிழமை இரவு முதலே சொந்த ஊருக்கு செல்வதற்கு தயாராகி விடுவார்கள்.

இதனால் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம் மற்றும் மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திங்கட்கிழமை தீபாவளி பண்டிகை முடிவடைவதால் அதற்கு அடுத்த நாளே மக்கள் வேலைக்கு மற்றும் தங்களுடைய ஊர்களுக்கு செல்வதற்கு தயாராகி விடுவார்கள்.

இதனால் செவ்வாய்க்கிழமை அன்று கண்டிப்பாக கடுமையான போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு திங்கட் கிழமையுடன் சேர்த்து செவ்வாய்க்கிழமையும் விடுமுறை அளித்தால் நன்றாக இருக்கும் என பெற்றோர்களும் குழந்தைகளும் விரும்புகின்றனர். மேலும் இது தொடர்பாக மேல் இடத்திற்கு தகவல் சென்றுள்ளது எனவும், கூடிய விரைவில் அக்டோபர் 25-ஆம் தேதியும் விடுமுறை என்று அறிவிப்பு வரும் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |