பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ரன்வீர் சிங். இவர் நடிகை தீபிகா படுகோனேவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இது தம்பதிகள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டதாக சமீபத்தில் இணையதளத்தில் தகவல்கள் பரவிய நிலையில் அந்த வதந்திகளுக்கு ரன்வீர் சிங் முற்றுப்புள்ளி வைத்தார். அதன் பிறகு நடிகர் ரன்வீர் சிங் அண்மையில் தன்னுடைய நிர்வாண புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக நடிகர் ரன்வீர் சிங் ரூ. 3 கோடியே 90 லட்சம் மதிப்பில் ஆடம்பரமான ஆஸ்டன் மார்டின் சொகுசு காரை வாங்கினார்.
இந்த காரின் இன்சூரன்ஸ் காலாவதி ஆகிவிட்டதாகவும் அதை புதுப்பிக்காமல் காரை ஓட்டுவதாகவும் ரன்வீர் மீது இணையதளத்தில் ஒருவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதற்கு காவல்துறையினர் நன்வீர் மீதான குற்றச்சாட்டை போக்குவரத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் என்று கூறியுள்ளனர். மேலும் நிர்வாண புகைப்படம் குறித்த சர்ச்சையில் சிக்கியர் ரன்வீர் மீது தற்போது புதிய புகார் எழுந்திருப்பது பாலிவுட் சினிமாவிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.