Categories
சினிமா தமிழ் சினிமா

WOW! ராக் ஸ்டாராக மாறிய‌ “அனிருத்”…. மெட்ரோ ரயிலில் வேற லெவல் சர்ப்ரைஸ்….. ரசிகர்களுக்கு செம மஜா தான்….!!!!

தமிழ் சினிமாவில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான 3 என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இந்த படத்திற்குப் பிறகு எதிர்நீச்சல், மான்கராத்தே, கத்தி, தானா சேர்ந்த கூட்டம், மாரி மற்றும் வேதாளம் உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசை அமைப்பாளராக உயர்ந்தார். இவர் தற்போது ஜவான் என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டிலும் இசை அமைப்பாளராக அறிமுகமாக இருக்கிறார்.

இந்நிலையில் அனிருத் சினிமா உலகிற்கு வந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை கொண்டாடும் விதமாக அனிருத் ராக்ஸ்டார் ஆன் ஹாட்ஸ்டார் என்ற மியூசிக் கான்செட் நிகழ்ச்சியை disney+ hotstar ஓடிடி தளத்துடன் இணைந்து நடத்த இருக்கிறார்.

அனிருத்தின் இசை நிகழ்ச்சி வருகிற அக்டோபர் 21-ஆம் தேதி இரவு 8 மணிக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரலையில் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்நிலையில் அனிருத்தின் இசை நிகழ்ச்சி தொடங்குவதற்கு இன்னும் ஓரிரு நாட்களே இருப்பதால் சென்னையில் இசை நிகழ்ச்சி குறித்த விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி சென்னை மெட்ரோ ரயிலில் அனிருத்தின் இசை நிகழ்ச்சி குறித்த பல்வேறு விளம்பர படங்கள் வைக்கப்பட்டுள்ளது.

ரயிலின் வெளி புறம் மட்டுமின்றி உட்புறத்திலும் அனிருத் இசை நிகழ்ச்சி குறித்து விளம்பரங்கள் வைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று சென்னையில் உள்ள மெரினா மாலில் நிற்கும் கார்களில் ஹாரன் சவுண்டுகள் அனிருத் இசையமைப்பில் வெளியான டிப்பம் டிப்பம் என்ற பாடலில் ஒளிபரப்புவது ரசிகர்களை மிகுந்த உற்சாகத்திற்கு ஆழ்த்தியுள்ளது. மேலும் இசை நிகழ்ச்சி குறித்த விளம்பரங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |