ஜோதிகா வொர்க் அவுட் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஜோதிகா. இவர் அஜித் நடிப்பில் வெளியான வாலி படத்தின் மூலம் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார். பின்னர் சூர்யாவுடன் பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். இதனை தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் இவர் இணைந்து நடித்தார்.
திருமணத்திற்கு பிறகு கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில், சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் நடிகர் சூர்யாவை மிஞ்சும் அளவிற்கு இவர் ஒர்க்கவுட் செய்து அசத்தியுள்ளார். இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/p/Cj4daKzrpm8/