Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வெடித்து சிதறிய பாகங்கள்….நடுரோட்டில் பற்றி எரிந்த கார்….. பரபரப்பு சம்பவம்….!!!

சொகுசு கார் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள உள்ள கோயம்பேடு பகுதியில் இருந்து கதிரவன் என்பவர் பிஎம்டபிள்யூ கார் சென்ட்ரல் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கோயம்பேடு மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது காரின் முன் பகுதியில் இருந்து புகை வந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த கதிரவன் உடனடியாக கீழே இறங்கினார்.

சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்க முயன்றனர். அப்போது திடீரென காரில் இருந்து பாகங்கள் வெடித்து சிதறியது. பின்னர் தீ அணைக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |