சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
சென்னை மாவட்டத்தில் உள்ள புரசைவாக்கம் தானா தெருவில் ஏராளமான கடைகள் அமைந்துள்ளது. இந்த சாலையை பூக்கடைகளும், பழ கடைகளும் ஆக்கிரமித்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஊழியர்களும், போக்குவரத்து போலீசாரம் இணைந்து அந்த பகுதியில் இருந்து ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர். இதனால் விசாலமான சாலையில் வாகன ஓட்டிகள் தற்போது நிம்மதியாக செல்கின்றனர்.