ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் ரோவ்மன் பவல் அடித்த சிக்சர் (104 மீட்டர்) வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது..
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தகுதிச்சுற்று போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் இன்று மோதியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணில் அதிகபட்சமாக ஜான்சன் சார்லஸ் 45 ரன்களும், ரோவ்மன் பவல் 21 பந்துகளில் 28 ரன்கள் எடுத்திருந்தனர். மேலும் அகேல் ஹொசின் 23 ரன்கள் எடுத்தார்.
அதன்பின் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி வெஸ்ட் இண்டீஸ் அணியின் அசுர வேகப்பந்துவீச்சினை தாக்கு பிடிக்க 18.2 ஓவரில் 10 விக்கெட் இழந்து 122 ரன்களுக்கு ஜிம்பாப்வே ஆல் அவுட் ஆனது. இதனால் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.
இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கின் போது 13.6 ஓவரில் 101 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்து தடுமாறிய போது ரோவ்மன் பவல் மற்றும் அகேல் ஹொசைன் இருவரும் ஜோடி சேர்ந்து சிறிய பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவிலிருந்து மீட்டனர்.. பின் பிளஸ்ஸிங் முசரபானி கடைசி ஓவரில் ரோவ்மன் பவல் 2 சிக்சர்களை பறக்க விட்டார். அதில் 3ஆவது பந்தில் ரோவ்மன் பவல் அடித்த சிக்சர் 104 மீட்டருக்கு பறந்தது. வானத்தை நோக்கி வெகு தொலைவில் போய் சென்ற அந்த பந்தை சக வீரர் அகேல் ஹொசைன் வாயடைத்து போய் வியந்து அந்த திசையை நோக்கி சிறிது நேரம் பார்த்தார். ஆனால் எந்தவித ரியாக்ஷனும் காட்டாதது போல் பவல் இருந்தார்.
இந்த சிக்ஸர் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. முன்னதாக நேற்று ஐக்கிய அரபு அமீரக வீரர் ஜுனைத் சித்திக் இலங்கைக்கு எதிரான தகுதிச்சுற்று போட்டியில் 17வது ஓவரில் அடித்த சிக்சர் 109 மீட்டருக்கு பறந்தது குறிப்பிடத்தக்கது.
Rovman Powell hits monsterous 104m six! pic.twitter.com/Zs8YZbBdmC
— GZ⚡ (@Fatbatman08) October 19, 2022