Categories
அரசியல் மாநில செய்திகள்

பி.சி.ரெட்டி-யை இதுல இழுத்து இருக்காங்க..! கண்டிப்பா சும்மா இருக்க மாட்டார்கள்; இனிதான் விறுவிறுப்பா இருக்கும்; டிடிவி பரபரப்பு கருத்து ..!!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இந்த விசாரணை ஆணையத்தில் எந்த ஒரு சாட்சிகளும், குற்றச்சாட்டுகளும் யாருக்கு எதிராக சொன்ன மாதிரி தெரியவில்லை. சசிகலா மட்டும் இல்லை, முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கராக இருக்கட்டும், ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருக்கட்டும்,

அப்பல்லோ மருத்துவமனையாக இருக்கட்டும், வயதில் பெரியவர் பி.சி. ரெட்டி வரைக்கும் இதுல இழுத்து இருக்காங்க. எய்ம்ஸ் அறிக்கை நிரகரிப்பட்டு இருக்கிறது. இதெல்லாம் வருங்காலத்தில் அவர்கள் எல்லாம் சும்மா இருக்க மாட்டார்கள். எல்லோரும் அதை சட்டரீதியாக எதிர்கொள்வார்கள், பாதிக்கப்பட்டவர்கள் எங்களுக்கு இது போல ஒரு பாதிப்பு வந்திருக்கிறது என்று சசிகலா உட்பட எல்லோரும் அது சம்பந்தமாக சட்டரீதியான எதிர்ப்பை எடுப்பார்கள்.

அதனால் வருங்காலத்தில் தெரியும். உங்களுக்கு இது தொடர்பாக விறுவிறுப்பாக இருக்கும் கொஞ்ச நாளில் உங்களுக்கு…ஆணையத்தின் உடைய அறிக்கை என்பதை தாண்டி,  இந்த ஆணையமே அரசியல்காக உருவாக்கப்பட்டது தான். இதில் அரசியல் இல்லாமல் எப்படி இருக்கும் ? என தெரிவித்தார்.

Categories

Tech |