Categories
அரசியல் மாநில செய்திகள்

மாலை 5மணி இருக்கும்..! வாக்கிங்_இல் இருந்த டிடிவி…! தீடிரென வந்த ஷாக்கிங் கால்…!!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நான் இந்த அறிக்கைக்காக சசிகலாவை சந்திக்க வரவில்லை, எப்பவும் தீபாவளி, பொங்கல் நேரத்தில் அவர்களை சந்தித்து,  அவர்களுக்கு துணி எல்லாம் கொடுத்துவிட்டு பார்க்க வருவேன். அதே போல நாளைக்கு நான் ஊருக்கு செல்கிறேன். 24ஆம் தேதி மருது பாண்டியன் நினைவு நாள்..  அங்கு எல்லாம் போகிறேன், தஞ்சாவூருக்கு போகிறேன்…

சகோதரி, மகளுக்கு எல்லாம் தீபாவளி பரிசு கொடுப்பது எங்களோடதுல ஒரு பழக்கம், அதனால போறேன். அதனால் சசிகலாவிடம் பார்த்துக் கொடுக்கலாம் என வந்தேன். ஆனால் இன்றைக்கு ஆணைய அறிக்கை வந்திருக்கிறது, மற்றபடி ஒன்றுமில்லை. நான் 15 நிமிடம் இருந்திருப்பேன், மற்றபடி ஒன்னும் இல்லை, நான் அதை பற்றி பெரிதாக பேசிக் கொள்ளவில்லை,  அவர்களும் பதில் சொல்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்கள்.

இறப்பு தேதியில் எந்த குழப்பம் இல்லை, உங்கள் எல்லோருக்கும் தெரியும். அப்பல்லோ மருத்துவமனையில் அவ்வளவு மருத்துவர்கள் இருக்கிறார்கள்,  அவர்கள் மறைக்க போகிறார்களா ?  4ஆம் தேதி மாலையில் எனக்கு நேரம் சரியாக தெரியவில்லை, அப்போது நான் வாக்கிங் சென்றுகொண்டு இருந்தேன். அப்போது 5 மணிக்கு மேல் தான் எனக்கு தகவல் வந்தது, நான் போனேன். அம்மாவிற்கு கார்டியா அரெஸ்ட் என்று சொல்லி, அப்போது மருத்துவர்கள் முதல் உதவி கொடுத்தார்கள்.

எல்லாம் செய்து கொண்டு இருந்தார்கள், அவர்கள் அதனுடைய முயற்சியாக தொடர்ச்சியாக எக்மோவை பொறுத்தி இருந்தார்கள், நான் போகும் போது 6 மணிக்கு மேல் ஆகிவிட்டது. பொதுவாகவே உங்களுக்கு தெரியும், அது உயிர் காப்பதற்கான ஒரு சிகிச்சை. அம்மாவிற்கு கார்டியாக அரெஸ்ட் ஆனது,  அதில் அதற்காக அவர்கள்  எக்மோவை பொறுத்தி இருந்தார்கள், சிவியர் கார்டியா அரெஸ்ட் ஆகியது.

இந்த கருவி பொருத்தி  இருந்ததினால் அவர்கள் ஒரு 24 மணி நேரம் பார்ப்போம், எங்களுக்கு நம்பிக்கை இருந்தால், இன்னும் 24 மணி நேரம், 72 மணி நேரம் வரைக்கும் பார்க்கலாம் என்று அவர்கள் பேசிக் கொண்டார்கள். அடுத்த நாள் 24 மணி நேரம் கழித்து, அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்று சொன்னதும் அவர்கள் இறந்ததாக அறிவித்தார்கள், அதுதான் எனக்கு தெரிந்த தகவல் என கூறினார்.

Categories

Tech |