திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் நோயாளி ஒருவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அந்த சிகிச்சையின் போது நோயாளியின் மகளை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார் மருத்துவர். இந்த நிலையில் மருத்துவர் அளித்த திருமண வாக்குறுதியின் பெயரில் 26 வயதுடைய அந்த பெண்ணும் மருத்துவரிடம் நெருங்கி பழகியுள்ளார்.
அதன் பின் தந்தையின் சிகிச்சை முடிந்ததும் பெண்ணை அழகாக கழட்டி விட்டுள்ளார் மருத்துவர். அதன் பின் அவரது சொந்த மாநிலமான மேற்கு வங்கத்தை சேர்ந்த மற்றொரு பெண்ணுடன் அவருக்கு திருமணம் நிச்சயதார்த்தம் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து அந்த பெண்ணின் தந்தை அளித்த புகாரின் பேரில் மருத்துவர் மகிளா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு இருக்கின்றார். இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் மருத்துவர் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது இது பற்றி மேலும் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.