Categories
உலக செய்திகள்

“அடக்கடவுளே!”… இது என்ன பயங்கரம்?… 80% பேரை கொல்லும் அதிர்ச்சிகரமான சோதனை…!!!

அமெரிக்க நாட்டின் ஒரு ஆய்வகத்தில் ஹைபிரிட் சூப்பர் கொரோனா என்ற கிருமியை உருவாக்கி விஞ்ஞானிகள் ஆபத்துடன் விளையாடியதாக கடுமையான சர்ச்சை எழுந்திருக்கிறது.

பிரிட்டன் நாட்டின் ஒரு ஆய்வகமானது, ஒமிக்ரான், வூஹான் ஆகிய இரண்டு கொரோனா மாதிரிகளையும் ஒன்றாக சேர்த்து புதிதாக ஹைப்ரிட் சூப்பர் கொரோனா என்ற கிருமியை தயாரிக்கும் சோதனையை செய்தது. இதில் 80% எலிகள் இறந்ததாக அதிர வைக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த ஆய்வை பாஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களின் குழு மேற்கொண்டிருக்கிறது. இவ்வாறான ஒரு ஆய்வை மேற்கொண்டு தான் உலகமே இன்று  பழைய நிலைக்கு மீள முடியாத அளவில் போராடிக் கொண்டிருக்கிறது என்பதை இந்த விஞ்ஞானிகள் மறந்து விட்டார்களா சர்ச்சை எழுந்திருக்கிறது.

அதாவது, இந்த சோதனை மேற்கொள்வதற்கு முன்பாக எலிகளுக்கு ஒமிக்ரான் வைரஸை செலுத்தியிருக்கிறார்கள். அதில், சிறிய அறிகுறிகளோடு எலிகள் உயிர்ப் பிழைத்து விட்டன. ஆனால் புதிதாக உருவாக்கப்பட்ட ஹைபிரிட் சூப்பர் கொரோனா கிருமியை எலிகளுக்கு செலுத்திய பின் 80% எலிகள் உயிரிழந்திருக்கின்றன.

அதாவது, இந்த தொற்று பரவ தொடங்கினால் சுமார் 80% மக்கள் உயிரிழக்கலாம் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த சோதனை குறித்த தகவல் வெளியானவுடன் இஸ்ரேல் அரசாங்கத்தின் முதன்மை விஞ்ஞானியாக இருக்கும் Shmuel Shapira கடுமையாக விமர்சித்ததோடு மொத்தமாக இதனை தடை செய்ய வேண்டும். இது ஆபத்தோடு விளையாடுவதற்கு சமம் என்று கடுமையாக சாடியிருக்கிறார்.

Categories

Tech |