தமிழகத்தில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் விதித்து மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டுள்ளது. தீபாவளி அன்று காலை 6-7 மணி நேரம் வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம். குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மை கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும் என மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் காலை 7-8, மாலை 8-9 என 2 மணி நேரத்திற்கு மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் * குழந்தைகள் தனியாக பட்டாசு கொளுத்த கூடாது * குடிசைகள், பெட்ரோல் பங்குகள், மருத்துவமனை, பள்ளிகள் அருகே பட்டாசு வெடிக்க கூடாது * ரயிலில் பட்டாசு எடுத்து செல்லக் கூடாது. * உரிமம் இல்லாமல் பட்டாசு விற்கக் கூடாது. ஆகிய கட்டுப்பாடுகளை தமிழக காவல்துறை விதித்துள்ளது.