Categories
தேசிய செய்திகள்

பெண்ணை கடத்தி டார்ச்சர் செய்த கும்பல்…. இதுதான் காரணமா?…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!!!

காசியாபாத் நகரிலிருந்து டெல்லியை இணைக்கும் பகுதியில் ஆசிரம சாலையில் பெண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடக்கிறார் என்று காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பெண்ணை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அவரை பரிசோதனை செய்ய மருத்துவர்கள் மறுத்துள்ளனர். அதன்பின் குரு தேஜ் பகதூர் மருத்துவமனைக்கு அப்பெண்ணை காவல்துறையினர் கொண்டு சென்றனர். அதனை தொடர்ந்து அப்பெண்ணிடம் இருந்து வாக்குமூலம் பெற்றனர். அவற்றில் பல பரபரப்பு தகவல்கள் வெளிவந்தது.

அதாவது, அந்த பெண் காசியாபாத் நகரில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லிக்கு திரும்பி இருக்கிறார். அப்போது அவரது சகோதரர் பேருந்து நிலையத்தில் பெண்ணை இறக்கிவிட்டுள்ளார். இந்நிலையில் பேருந்துக்காக காத்திருந்தபோது, அவரை கார் ஒன்று நெருங்கி நின்றுள்ளது. அதன்பின் உள்ளே இருந்த 5 பேர் பெண்ணை இழுத்து காருக்குள் தூக்கிபோட்டு அங்கிருந்து சென்றனர். பின் அடையாளம் தெரியாத இடத்திற்கு கொண்டு சென்று, பெண்ணை 2 தினங்களாக பாலியல் வன்கொடுமை மற்றும் சித்ரவதை செய்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில் நேற்று அப்பெண் ஆசிரம சாலையில் மயங்கிய நிலையில் காவல்துறையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளனர். இவ்வழக்கில் காசியாபாத் நகர மூத்த காவல் கண்காணிப்பாளர் விரிவான அறிக்கை விபரங்களை அளிக்கும்படி டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் ஒன்றை அனுப்பி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காசியாபாத் நகர காவல் கண்காணிப்பாளர் நிபுன் அகர்வால் கூறியதாவது, சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் 5 பேரும் பெண்ணுக்கு நன்றாக தெரிந்தவர்கள் ஆவர்.

அவர்களில் ஒருவரான ஷாருக்கான் என்பவர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். பெண் மற்றும் குற்றவாளிகள் இடையில் சொத்து விவகாரம் ஒன்று இருக்கிறது எனவும் அது கோர்ட்டு விசாரணையில் உள்ளது எனவும் கூறப்படுகிறது. நாங்கள் அனைத்து தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |