Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை (20.10.22) மின்தடை…. எந்தெந்த பகுதிகள் தெரியுமா….? இதோ மொத்த லிஸ்ட் மக்களே…..,!!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக நாளை  20-10-2022 மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

திருப்பூர்

உடுமலை துணை மின் நிலையம் பகுதிக்கு உட்பட்ட மானுப்பட்டி பீடர், பெதப்பம்பட்டி பீடர், கணபதிபாளையம் பீடர்களுக்கு உட்பட்ட ராகல் பாவி சுண்டக்காம்பாளையம், போடிபட்டி, பள்ளபாளையம், அண்ணா நகர், குறிச்சிக்கோட்டை, கொங்கலக்குறிச்சி, விஜி ராவ் நகர், குறிஞ்சேரி, புக்குளம், கணபதிபாளையம், வெனசபட்டி, தொட்டம்பட்டி, ராகல் பாவி பிரிவு ஆகிய பகுதிகளில் 10 மணி முதல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

சேலம்

சங்ககிரியை அடுத்துள்ள தேவூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தேவூர், அரியங்காடு, பெரமச்சிப்பாளையம், வெள்ளாளபாளையம், கைக்கோள்பாளையம், மயிலம்பட்டி, அம்மாபாளையம், மாமரத்துக்காடு, வட்டாரம்பாளையம், அரசிராமணி செட்டிப்பட்டி, குள்ளம்பட்டி, ஒடசக்கரை காணியாளம்பட்டி, புள்ளாகவுண்டம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடைபடும்.

தர்மபுரி

மொரப்பூர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணியில் காரணமாக வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மொரப்பூர், நைனாகவுண்டம்பட்டி, இராசலாம்பட்டி, சென்னம்பட்டி, எலவடை, தம்பிசெட்டிப்பட்டி, கிட்டனூர், நாச்சினாம்பட்டி, செட்ரப்பட்டி, கல்லூர், அப்பியம்பட்டி, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மின்தடை செய்யப்படும்.

தூத்துக்குடி

கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற் பொறியாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- விஜயாபுரி உப மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் செய்யப்படும் கெச்சிலாபுரம் மின் தொடராகவும், மஞ்சத்தோப்பு மின் தொடராகவும் 2ஆக பிரிக்கும் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றது. மீதமுள்ள பணிகள் வியாழக்கிழமை நடைபெற இருக்கிறது. எனவே, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கிழவிப்பட்டி, கெச்சிலாபுரம் ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது.

தூத்துக்குடி பீச் ரோடு துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வியாழக்கிழமை காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது. இதனால் இனிகோநகர், ரோச்காலனி, சகாயபுரம், மினிசகாயபுரம், மாதா தோட்டம், கடல்சார் மீன்வள ஆராய்ச்சி நிலையம், தெற்கு பீச் ரோடு மற்றும் அதனை சுற்றி உள்ள உப்பள பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.

Categories

Tech |