Categories
பல்சுவை

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்… தாம்பரம் – திருநெல்வேலி… தீபாவளி சிறப்பு ரயில் முன்பதிவு தொடக்கம்…!!!!!

இந்த வருடம் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதேபோல் மாநிலம் முழுவதும் இருந்து மற்ற ஊர்களுக்கு சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. நீண்ட தூர பயணங்களுக்கு செல்ல இருக்கும் மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தயே நம்பி இருக்கின்றார்கள். முன்பதிவு செய்து இருப்பவர்களை தவிர்த்து மற்றவர்கள் பொது பெட்டியில் பயணிக்க வேண்டிய சூழல் இருக்கிறது. இதனால் தீபாவளிக்கு முந்தைய சில தினங்களில் முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கிறது.

இந்த கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக தென்னக ரயில்வே சிறப்பு ரயில் சேவையை அறிவித்திருக்கிறது. அதன்படி தாம்பரம் – திருநெல்வேலிக்கு இடையே ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படுவதற்காக தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்திருக்கின்றது. அதன்படி இந்த சிறப்பு ரயில் தாம்பரத்திலிருந்து அக்டோபர் 20 அன்று இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு திருநெல்வேலிக்கு செல்கின்றது. மறு மார்க்கத்தில் திருநெல்வேலி – சென்னை எழும்பூர் இடையே பண்டிகை கால சிறப்பு கட்டண ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து அக்டோபர் 21 மதியம் ஒரு மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்துடுகிறது.

செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை போன்ற ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன பெட்டி முதல் வகுப்பு பெட்டி, இரண்டு குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி, ஆறு குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி, ஆறு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு , ஒரு சரக்கு பெட்டி போன்றவை இருக்கிறது.

Categories

Tech |