Categories
உலக செய்திகள்

மன்னர் சார்லஸின் காரிலிருந்து வரும் வாசனை…. வெளியான வினோத காரணம்…!!!

பிரிட்டன் மன்னர் சார்லஸ் பயன்படுத்தும் வாகனத்திற்கு வித்தியாசமான பொருளை எரிபொருளாக பயன்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரிட்டன் மன்னர் சார்லஸ் பயன்படுத்தும் வாகனத்தில் ஒயின், சீஸ் இரண்டும் கலந்த கலவை தான் எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. மன்னர் சார்லஸிற்கு மிகவும் விருப்பமான இரண்டு விஷயங்கள், இயற்கையும் வாகனங்களும் தான். எனினும் இரண்டும் ஒன்றுக்கொன்று எதிர். வாகனத்திலிருந்து வெளியேறும் நச்சு புகையால் இயற்கை மாசடையும்.

எனவே, ஒயின் மற்றும் சீஸை கலந்து பயன்படுத்தும் விதத்தில் வாகனத்தின் எஞ்சினை மாற்ற நினைத்திருக்கிறார். அதன்படி, ஆஸ்டன் மார்ட்டின் நிறுவனத்திடம் கேட்டுள்ளார். ஆனால் அந்நிறுவனத்தினர், அவ்வாறு செய்யும் பட்சத்தில் வாகனம் மொத்தமாக பாழாகும் என்று கூறியுள்ளனர்.

அப்படி என்றால் தான் அந்த வாகனத்தை உபயோகப்படுத்த போவதில்லை என்று சார்லஸ் கூறிவிட்டாராம். எனவே அவருக்காக அவர் கூறியது போன்ற வாகனத்தை மாற்றி இருக்கிறார்கள். அதன் பிறகு, சார்லஸ் அந்த வாகனத்தை இயக்கியவுடன் அதிலிருந்து வெளிவந்த வாசனை நன்றாக இருப்பதாக அந்நிறுவனத்தினரே கூறியுள்ளனர்.

மேலும், தான் உபயோகப்படுத்தும் அந்த பிரத்யேக வாகனத்தை தனது மூத்த மகன் இளவரசர்  வில்லியமிற்கு திருமணமான சமயத்தில், தன் மனைவியுடன் சென்றுவர கொடுத்திருக்கிறார்.

Categories

Tech |