உலக அளவில் பல கோடிக்கணக்கான மக்களால் சமூக வலைதளமான whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப்பில் புதுப்புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் வாட்ஸ் அப்பில் கூடுதல் வாட்ஸ் அப் குழு, ஸ்க்ரீன் ஷாட் வசதி, ஒரு ஒருமுறை மட்டுமே பார்க்கக்கூடிய புகைப்படம் மற்றும் வீடியோ, ஆவணங்களை பகிர்தல், வாட்ஸ் அப் ப்ரீமியம், ஆவணங்களை பகிர்தல் போன்ற வசதிகள் இடம்பெறுகிறது. அதன்பிறகு whatsapp பயனர்கள் ஒரு மெசேஜ் அனுப்பியவுடன் அதை எடிட் செய்யும் வசதியும் அறிமுகப் படுத்தப்பட இருக்கிறது. இதே போன்ற டுவிட்டரில் கூட 15 நிமிடங்கள் எடிட் செய்யும் வசதி வரப்போவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் வாட்ஸ் அப் குழுவில் தற்போது 512 பேர் மட்டுமே பங்கேற்க முடியும் நிலையில், தற்போது 1024 பேர் பங்கேற்க முடியும் வகையில் புதிய அப்டேட் கொண்டு வரப்பட இருக்கிறது. இதே டெலிகிராம் செயலியில் 2 லட்சம் பேர் வரை பங்கேற்கலாம் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதைத்தொடர்ந்து தற்போது வாட்ஸ் அப்பில் புகைப்படம் மற்றும் வீடியோ அனுப்பும்போது GIF கேப்ஷன் பயன்படுத்தி அனுப்பினால் அதை மீண்டும் பார்ப்பதற்கு வசதியாக இருக்கும்.
ஒருமுறை மட்டுமே பார்க்கக்கூடிய புகைப்படம் மற்றும் வீடியோக்களை ஸ்க்ரீன் ஷாட் எடுக்க முடியாத புதுவிதமான அப்டேட்டும் வாட்ஸ் அப்பில் வர இருக்கிறது. இதன் மூலம் நீங்கள் ஒரு முறை மட்டுமே பார்க்கக்கூடிய புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பாதுகாப்பாக இருக்கும். மேலும் வாட்சப் பிசினஸ் செயலியை பயன்படுத்துபவர்கள் அதில் சில முக்கிய வசதிகளை பயன்படுத்திக் கொள்வதற்கு ப்ரீமியம் செலுத்தும் முறையும் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.