Categories
மாநில செய்திகள்

தர்ணா போராட்டம்..! ஈபிஎஸ் உட்பட 750 பேர் மீது வழக்குப்பதிவு…. அதிர்ச்சியில் அதிமுக.!!

எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள், எம்எல் ஏக்கள் உள்ளிட்ட 750 பேர் மீது சட்ட விரோதமாக கூடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவையில் ஆர் பி உதயகுமாரை எதிர்க்கட்சி துணை தலைவராக அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்றும், ஓ பன்னீர்செல்வத்திற்கு  அந்த அதிகாரத்தை கொடுக்க கூடாது என ஈபிஎஸ்  முழக்கம் எழுப்பியதால் சட்டப் பேரவையில் இருந்து சபாநாயகர் அப்பாவு ஈபிஎஸ் தரப்பு எம்எல் ஏக்களை வெளியேற்றுமாறு அவை காவலருக்கு உததரவிட்டு  ஒருநாள் சட்டசபையில் பங்கேற்க தடை விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து சட்டப் பேரவையில் நடந்த ஜனநாயக படுகொலையை கண்டித்து அதிமுக சார்பில் போராட்டம் நடத்தபடும் என ஈபிஎஸ் அறிவித்தார்.

அதன்படி அதிமுக சார்பில் நேற்று சென்னை மாநகர காவல் அலுவலகத்தில் தளவாய் சுந்தரம் தலைமையில் அதிமுகவினர் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு  ஒன்று அளித்திருந்தனர்.. அதாவது பாதுகாப்பு கேட்டும், உண்ணாவிரத போராட்டம் நடைபெற இருப்பதாகவும், இன்று நடைபெற இருப்பதாகவும் அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று புகார் மனு கொடுத்திருந்தனர். இந்த நிலையில் நேற்று அந்த மனு மீது சென்னை மாநகர காவல் துறை அவர்களுக்கு எந்த அனுமதி அளிக்கவில்லை, சட்டம் ஒழுங்கு காரணம் காட்டி அவர்கள் தர்ணா போராட்டம், உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர்.

தொடர்ந்து போராட்டம் இன்று நடைபெற இருந்தது. காவல்துறையினர் இந்த போராட்டத்திற்கான அனுமதிக்காத காரணத்தால் இன்று காலை 8 மணியில் ஈபிஎஸ் அதுமட்டுமில்லாமல் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி ஜெயக்குமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு மற்றும் கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்னை வள்ளுவர் கோட்டத்திற்கு வந்திருந்தனர், அனுமதி மறுத்த நிலையில் தொடர்ந்து அவர்கள் கருப்புச்சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கிருந்து கைது செய்யப்பட்டார்கள்.

இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டதற்கு முன்னதாக எங்களுக்கு அனுமதிக்கவில்லை எனக் கூறி அனைவரும் தர்ணாவில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டு சென்னை எழும்பூரில் இருக்கக்கூடிய ராஜரத்தின மண்டபத்தில் வைத்திருக்கிறார்கள். இந்நிலையில்  எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள், எம்எல் ஏக்கள்  உள்ளிட்ட 750 பேர் மீது சட்ட விரோதமாக கூடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.. இதனால் அதிமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.. இவர்கள் அனைவரும் மாலை மண்டபத்தில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.

Categories

Tech |