ஆப்கானிஸ்தானில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது முதல் இந்துகுஷ் மலைத்தொடரின் அருகே அமைந்துள்ள பஞ்ச்ஷீர் மாகாணத்தில் தலிப்பான்களுக்கு எதிரான கிளர்ச்சி படை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த கிளர்ச்சி படைக்கும் தலிபான்களுக்கும் இடையே அவ்வபோது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. கடந்த மாதம் பஞ்ச்ஷீர் மாகாணத்தில் நடைபெற்ற முதலில் கிளர்ச்சிப்படையினர் 40 பேர் கொல்லப்பட்டதாகவும் 100க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டதாகவும் தலிபான்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூழலில் பஞ்ஷீர் மாகாணத்தில் சிறைபிடிக்கப்பட்ட நபர்கள் 27 பேரை கை, கால்களை கட்டி போட்டு தலிபான்கள் கொடூரமான முறையில் சுட்டுக் கொன்றுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த மாத இறுதியில் நடைபெற்றதாக கூறப்படும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இங்கிலாந்தை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் லாப நோக்கமற்ற விசாரணை அமைப்பு ஒன்று வெளியிட்டு இருக்கிறது. இது அங்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இந்த குற்றச்சாட்டு பற்றி தெளிவான ராணுவ அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் எனயதுல்லா கவாரஸ்மி பேசும்போது சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டிருக்கின்ற வீடியோக்கள் பற்றி சிறப்பு விசாரணை குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது. விசாரணை நடத்தி வருவதால் இது பற்றிய கூடுதல் விவரங்களை வழங்க முடியாது என கூறியுள்ளார்.