Categories
அரசியல் மாநில செய்திகள்

கிளப்பி விட்ட DMK…! கையில் எடுத்த OPS… டிடிவி பரபரப்பு பேட்டி …!!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்,  அம்மாவின் மரணத்திற்கு பிறகு இந்த மாதிரி பிரச்சாரங்களை கிளப்பியது திமுக தான். அதை திரு.பன்னீர் செல்வம் அன்றைக்கு பதவியைவிட்டு போனதால் அதை அவர் கையில் எடுத்தார், திரும்பவும்..

திரு. பழனிச்சாமியும் அவரும் ஒன்று சேர்ந்த போது, மிகப் பெரிய சந்தேகம் இருக்கிறது. அதற்காக ஆணையம் அமைக்க வேண்டும் என்றார்கள்.ஆணையம் அமைப்பதற்கு குற்றச்சாட்டுக்கு காரணமாக திமுக பரப்பினதால்,  பன்னீர்செல்வமும்  காரணமாகிவிட்டார்.

எல்லாம் சரிதான், நான் ஒத்துக் கொள்கிறேன்.. ஆணையம் சொல்லியிருக்கு. வருங்காலத்தில் அரசாங்கம் என்ன செய்கிறது என்று பார்ப்போம் ? ஏனோதானோ என்று செய்ய முடியாது. ஏனென்றால் சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டல் படி தான் எய்ம்ஸ் இங்கே வந்தார்கள்.  அதிலும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.  பார்ப்போம் என்ன செய்கிறார்கள் என்று ? என தெரிவித்தார்.

Categories

Tech |