பிரபல நிறுவனம் பிரெய்லி வடிவில் நூல்களை வெளியிட உள்ளது.
நமது செம்மொழி நிறுவனம் பார்வை குறைபாடு உள்ளவர்கள் பயன்பெறும் வகையில் செவ்வியல் நூல்கள் உள்ளிட்ட 45-க்கும் மேற்பட்ட தமிழ் நூல்களை பிரெய்லி நூல்களாக வெளியிடும் திட்டம் நிறைவு பெறும் நிலையில் உள்ளது. இதுகுறித்து நிறுவன இயக்குனர் கூறியதாவது. தொல்காப்பியம், நற்றினை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு , பட்டினம் பாலை, மலைபடுகடம், நாவடியார், நான்மணிக் கடிகை உள்ளிட்ட 46 நூல்களும் பிரெய்லி வடிவில் வெளியிடப்படுகிறது. இந்த நூல்கள் அனைத்திலும் எளிய உரையும், மூல பாடங்கள் எளிய சந்தி அமைப்பிலும் இருக்கும். அனைத்து நூல்களும் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.