சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று கடினமான காரியங்களைக் கூட எளிதாக முடிப்பீர்கள். சகோதரர் வகையில் நன்மைகள் ஏற்படும். உங்களுடைய திருமண பேச்சுவார்த்தை நல்லபடியாக நடந்து முடியும். மனைவி வழியில் நல்ல செய்திகள் வந்துசேரும், மனைவியின் மூலம் அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும், தன்னம்பிக்கை துளிர்விடும் நாளாகவே இன்றைய நாள் இருக்கும்.
இன்று காரியதடை கொஞ்சம் தாமதம் இருக்கும். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. சமயத்திற்கு ஏற்ப கருத்துக்களை மாற்றிக் கொண்டு செயல்படுவீர்கள், உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாகவே இருங்கள் வீண் செலவை தயவுசெய்து குறைத்துக்கொள்ளுங்கள். காரியங்களை செய்யும் பொழுது திட்டமிட்ட செய்வது ரொம்ப நல்லது. இன்று மாணவச் செல்வங்கள் திட்டமிட்டு பாடங்களைப் படியுங்கள், படித்த பாடத்தை எழுதி பாருங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு ஒரு சிறப்பு வாய்ந்த நிறமாகவே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்களின் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்