Categories
தேசிய செய்திகள்

அம்மாடியோ!… மாமியார் வீட்டிலேயே கொள்ளை அடித்த மருமகள்…. நடந்தது என்ன?…. பெரும் பரபரப்பு….!!!

பஞ்சாபில் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் வரீந்தர் மிஸ்ரா என்பவர் வசித்து வருகிறார். இவரின் இளைய மகனுக்கு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது. இருவரும் மகிழ்ச்சியான திருமணம் வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் இளைய மகனின் மனைவி நேற்று இரண்டு இளைஞர்களின் உதவியுடன் பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை கொள்ளை அடித்துச் சென்றுள்ளார். நேற்று வரீந்தர் மிஸ்ராவின் வீட்டிற்குள் கத்தியுடன் நுழைந்த 2 இளைஞர்கள் அவரது மூத்த மருமகள் அஞ்சு மிஸ்ரா மற்றும் அவரது இரண்டரை வயதுஸமகனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

அதன் பிறகு அவரது மகனின் கழுத்தில் கத்திய வைத்து மிரட்டின் நகை மற்றும் பணத்தை கேட்டுள்ளனர். அஞ்சுவையும் அவரது மகனையும் ஒரு அறைக்குள் அடைத்து வைத்துவிட்டு நகைகள் மற்றும் பணத்துடன் குற்றம் சாட்டப்பட்ட பெண் இளைஞர்களுடன் தப்பிச் சென்றுள்ளார். இந்த சம்பவத்தின் போது அஞ்சு வீட்டில் தனியாக இருந்ததை சாதகமாக பயன்படுத்தி குற்றம் சாட்டப்பட்ட பெண் அவர்கள் இருவரையும் திட்டத்தை செயல்படுத்த அழைத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மூவரும் ஆட்டோவில் சென்றதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். பக்கத்து வீடுகளில் உள்ள சிசிடிவி காட்சிகளின் மூலம் குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |