Categories
மாநில செய்திகள்

குரூப் 2, குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது?….. தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு பிறகு நடப்பு ஆண்டில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் அனைத்தும் நடைபெற்றன . இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி நடத்தி உள்ள 12 வகை தேர்வுகளில் முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என உத்தேச அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக டி என் பி எஸ் சி நடத்தும் போட்டி தேர்வுகளில் முடிவுகள் ஒவ்வொரு மாதமும் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் .

அவ்வகையில் டிஎன்பிஎஸ்சி நடத்தியுள்ள 12 வகை தேர்வுகளின் முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற உத்தேச விவரம் நேற்று வெளியிடப்பட்ட நிலையில் குரூப் 2 முதல் நிலை தகுதி தேர்வு இந்த மாதமும் குரூப் 4 தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதமும் வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Categories

Tech |