Categories
சினிமா தமிழ் சினிமா

“திடீர் போதை பொருள் சர்ச்சை” ரசிகர்களுக்கு யுவன் விடுத்த கோரிக்கை…. வைரலாகும் பதிவு….!!!!

ஜெயம் ரவி நடித்த கோமாளி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் மூலம் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக அறிமுகமாகிறார். இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது லவ் டுடே படத்தில் இடம்பெற்ற பச்சை இலை என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடல் வெளியாகி வைரலாகி வந்தாலும், பாடல் வரிகளில் போதைப்பொருள் என்ற வார்த்தை இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இதனால் பச்சை இலை பாடல் போதை பொருள் பயன்படுத்துவதை ஆதரிப்பது போல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக தற்போது இவன் சங்கர் ராஜா பச்சை இலை பாடலுக்கு விளக்கம் அளித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் படத்தின் ஜாலிக்காக உருவாக்கப்பட்ட ஒரு ஃபண்பான பாடல். மற்றபடி போதை பொருளை ஆதரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்படவில்லை. மேலும் நிஜ வாழ்க்கையில் அனைவரும் போதைப் பொருள்களை பயன்படுத்துவதில் இருந்து விலகியிருங்கள் என்று கோரிக்கை விடுத்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |