புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டியலின மக்களுக்கு இலவச வேட்டி, சேலைக்கு பதில் 4500 வழங்கப்படும் என அமைச்சர் சந்திர பிரியங்கா அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் வரும் 24ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் அந்தந்த மாநில அரசுகள் தீபாவளி பரிசாக ஒரு சில சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியில் தீபாவளி பண்டிகை குட்டி பட்டியலின மக்களுக்கு இலவச வேஷ்டி செயல்களுக்கு பதிலாக ரூபாய் 500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவை சேர்ந்த, குடும்ப அட்டையில் பெயர் உள்ள 18 வயது நிரம்பிய நபர் ஒன்றுக்கு தலா 500 வீதம் இலவச வேட்டி, சேலைகளுக்கு பதிலாக வழங்கப்பட உள்ளது. மொத்தம் 57,868 ஆண்கள் மற்றும் 67,864 பெண்களுக்கு இந்த பணம் வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ளது.