Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்… “கட்டணமே இல்லாமல் ரயில் டிக்கெட் வாங்கலாம்”…? வரப்போகும் புதிய வசதி…!!!!

ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாகவும், ஐ ஆர் சி டி சி மொபைல் மூலமாகவும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் இதுபோக விமான டிக்கெட் புக்கிங், சுற்றுலா சேவைகளையும் ஐ ஆர் சி டி சி வழங்குகிறது. இந்த சூழலில் ஐ ஆர் சி டி சி நிறுவனம் கேஷ்இ நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து ட்ராவல் நவ் பே லேட்டர் சேவையை வழங்கப் போவதாக கேஷ்இ நிறுவனம் அறிவித்துள்ளது. அது என்ன டிராவல் நவ் பெயர் லெட்டர்.? அதாவது பொதுவாக ஐஆர்சிடிசி தளத்தில் ரயில் புக்கிங் செய்யும்போது அப்போதே கட்டணம் செலுத்த வேண்டும் கிரெடிட் கார்டு வைத்திருப்போர் அதை  பயன்படுத்தி கட்டணம் செலுத்தி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் அதன் பின் கிரெடிட் கார்டு கட்டணத்தை தாமதமாக செலுத்திக் கொள்ளலாம்.

இந்த சூழலில் ஐ ஆர் சி டி சி கேஷ்இ  நிறுவனங்கள் இணைந்து டிராவல் நவ் பே லேட்டர் வசதியை கொண்டுவரப் போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதன்படி பயணிகள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது கட்டணமே செலுத்தாமல் டிராவல் நவ் பேலேட்டர் வசதியை பயன்படுத்தி டிக்கெட் வாங்கிக் கொள்ளலாம். இதற்கு கேஷ்இ கட்டண முறை பயன்படும் அதாவது உங்களுக்காக கேஷ்இ கட்டணம் செலுத்தி விடுகிறது அதன் பின் நீங்கள் தாமதமாக கேஷ்இ நிறுவனத்திற்கு டிக்கெட் கட்டண தொகை செலுத்திக் கொள்ளலாம். இதில் இஎம்ஐ முறையிலும் கட்டணத்தை திருப்பி செலுத்தலாம் இதனால் நாடு முழுவதும் உள்ள ரயில் பயணிகள் பெரிதும் பயன் அடைகின்றார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஐ ஆர் சி டி சி தளத்தில் ஒவ்வொரு நாளும் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |