Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மனதில் ஏற்பட்ட அழுத்தம்…. 4 வயது மகளுடன் தற்கொலை…. தந்தை மகள் மரணம்..!!

நான்கு வயது மகளுடன் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாதாவரம் பகுதியை சேர்ந்தவர் திருப்பதி சுனிதா தம்பதியினர். இத்தம்பதியினருக்கு ஹரிஷ் என்ற மகனும் ஹரிகா என்ற நாலு வயது மகளும் இருந்துள்ளனர். திருப்பதி சென்னையில் இருக்கும் பூண்டு கடை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். சில நாட்களாகவே மனஅழுத்த நோயால் அவதி பட்டு வந்துள்ளார் திருப்பதி. மன அழுத்தத்தின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டின் மொட்டை மாடிக்கு தனது 4 வயது மகளை அழைத்துச் சென்ற திருப்பதி யாரும் பார்க்காத சமயம் தனது மகளுடன் மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்து விட்டார். இதில் காயமடைந்த இருவரும் உயிருக்கு போராடியுள்ளனர் அதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் விரைந்து வந்து இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Categories

Tech |