கடன் வாங்கி திரும்ப தராவிட்டால் கொடுத்த கடனை எப்படியாவது வாங்கி விட வேண்டும் என போராடி சில சமயங்களில் கடன் கொடுத்தவருக்கும் வாங்கியவருக்கும் இடையே கத்தி குத்து சம்பவங்கள் கூட நடைபெற்று இருக்கிறது. இப்படி பல சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அந்த வகையில் ஒடிசாவின் கட்டப்பகுதியில் கொடுத்த கடனை திருப்பிக் கொடுக்காத காரணத்திற்காக கடன் வாங்கிய நபரை கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு பைக்கோடு கயிற்றில் கட்டியபடி இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஜகன்நாத் பெஹெரா என்ற நபரை 12 கீமிநீளமுள்ள ஒரு கயிற்றில் கட்டி அதன் மறுமுனையை இருசக்கர வாகனத்தில் கட்டி கட்டக்கில் உள்ள ஸ்டூவர்ட் பட்னா சதுக்கம் முதல் சுதாஹத் சதுக்கம் வரை இரண்டு கிலோமீட்டர் மேலாக உள்ள இந்த தொலைவை 20 நிமிடங்களாக இழுத்துச் சென்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.
Viral Video: Odisha Man Tied To Scooty And Dragged On Busy Road For 2 km https://t.co/UsQQvsMJpb pic.twitter.com/3F3PQG8fUf
— NDTV (@ndtv) October 18, 2022
இதைக் கண்ட சுதாஹத் சதுக்கத்தை சேர்ந்த மக்கள் அந்த வாலிபரை மீட்டு இருக்கின்றனர். இதனை அடுத்து விசாரித்த போது ஜகன்நாத் தன்னுடைய தாத்தாவின் இறுதி சடங்கிற்காக கடந்த மாதம் குற்றம் இழைத்தவரிடம் இருந்து 1500 ரூபாய் கடனாக வாங்கியுள்ளார். இதை 30 நாளில் திருப்பி தந்து விடுவதாக கூறியுள்ளார் ஆனால் அவர் சொன்னபடி கடனை கொடுக்காததால் அதற்கு தண்டனையாக அவர்கள் இப்படி செய்துள்ளனர் என்பதை தெரியவந்துள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலான பின் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் .