Categories
அரசியல் மாநில செய்திகள்

முஸ்லீம் மக்களுக்கு பாதிப்பு…. எடப்பாடி ஒப்புதல் வாக்குமூலம் ….. ஸ்டாலின் விமர்சனம் …!!

CAA , NPR சட்டத்தால் மக்களுக்கு பாதிப்பு இருக்கின்றது என்று முதல்வர் ஒப்புதல் அளித்ததாக முக.ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது.  இதில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் , புதுச்சேரி முதலமைச்சர் ராமசாமி இந்து ராம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், குடியுரிமை சட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் வராது என்று முதலவர் எடப்பாடி பழனிச்சாமி சொன்னார். இப்போது மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறாரா இல்லையா ? தேவையில்லா விவரங்களைக் கேட்கிறார்கள். NPR கணக்கெடுப்பை தமிழகத்தில் நடத்த அனுமதிக்க கூடாது என்று நான் சட்டமன்றத்திலே கேட்டேன்.

அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. சாதாரணமாகவே அவரின் முகத்தை பார்க்க முடியாது. அப்போது கடுகடுப்பு முகத்தை வைத்துக்கொண்டு  CAA , NPR சட்டத்தால் யாரு பாதிக்கப்படுகிறார்கள். திமுக கபட நாடகம் ஆடுகிறது , ஏமாற்றுகிறது என்று கோபமாக பேசினார். அப்படிப் பேசியவர்கள் கடந்த 22ஆம் தேதி மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,  துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் இருவரும் சேர்ந்து ஒரு கூட்டு அறிக்கை வெளியிட்டார்கள்.

அந்த கூட்டு அறிக்கையில் மிகத் தெளிவாக சொல்லி இருக்காங்க. NPR சட்டத்தில் தாய்மொழி,  தாயார் பெயர் , கைபேசி எண் , வாக்காளர் அடையாள அட்டை , ஓட்டுனர் உரிமம் போன்ற விவரங்கள் 2020 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் தவிர்க்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் என்று சொல்லியிருக்கிறார்கள்.  எதற்காக இப்படி ஒரு கடிதம் எழுதினார் ஆபத்து இருக்கிறதா இல்லையா ? அவரே ஒப்புதல் அளித்து விட்டார் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

Categories

Tech |