சென்ற 2011ம் வருடம் ஒளிபரப்பப்பட்ட “சாசுரால் சிமார் கா” என்ற இந்தி தொடர், தமிழில் தனியார் தொலைக்காட்சியில் “மூன்று முடிச்சு” எனும் பெயரில் வெளியாகியது. அந்த சீரியலின் கதாநாயகி சீமாவின் மகளாக அஞ்சலி என்ற கதாபத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர்தான் வைஷாலி தக்கார்(29). இவர் இந்தி வட்டாரத்தில் நன்றாக அறியப்படும் சின்னத்திரை நடிகையாக இருந்துவந்தார். சமூகவலைதளங்களில் வைஷாலி ஆக்டிவாக உள்ளதால் அவரை பெரும்பாலானோர் பாலோவ் செய்து வருகின்றனர். இந்நிலையில் சென்ற 2 நாட்களுக்கு முன் வைஷாலி தக்கார் மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் பகுதியிலுள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அந்த வீட்டில் வைஷாலி தனது தந்தை மற்றும் சகோதரனுடன் வசித்துவந்தார். அன்று முழுதும் வைஷாலியின் அறை திறக்கப்படாமல் இருந்தது. இதன் காரணமாக வீட்டில் உள்ளவர்கள், அந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வைஷாலி தூக்குபோட்டு தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் படி சம்பவம் இடத்திற்கு வந்த காவல்துறையினர், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். அதன்பின் அவரது வீட்டை சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் தற்கொலை கடிதம் ஒன்று சிக்கியது.
அவற்றில் “சில காலம்வரை தான் அதிக மனஅழுத்தத்தில் இருந்ததாகவும், தன் முன்னாள் காதலனால் தான் துன்புறுத்தப்பட்டு வந்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார். முன்பாக தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்ததாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்த அவர், எனக்கு வரப்போகும் கணவர் கென்யா நாட்டை சேர்ந்த பல் மருத்துவர் அபிநந்தன் சிங் என குறிப்பிட்டிருந்தார். அதன்பின் அபிநந்தனை தான் திருமணம் செய்யப்போவதில்லை எனவும் தெரிவித்தார். இந்நிலையில் முன்னாள் காதலனால் தற்கொலை செய்வதாக அவர் எழுதி வைத்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.