Categories
அரசியல்

“தீபாவளி பண்டிகை” எப்படி கொண்டாட வேண்டும்? முன்னோர்கள் வகுத்த வழிமுறை….!!!!!

தீபாவளி பண்டிகை வருகிற 24-ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. உலகம் முழுவதும் இந்துக்கள் மட்டுமின்றி சமணர்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட பல்வேறு மதத்தை சேர்ந்தவர்களும் தீபாவளியை திருவிழாவாக கொண்டாடுகின்றனர். தீபாவளி தினத்தில் வீடுகளை சுத்தம் செய்து புத்தாடை அணிந்து, இனிப்புகள் பரிமாறி, பட்டாசுகளை வெடித்து கொண்டாடுகிறோம்.

தீபாவளி கொண்டாடுவதற்கு என்று முன்னோர்கள் சில வழிமுறைகளை வகுத்து வைத்துள்ளனர். தீபாவளி பண்டிகையில் புத்தாடை வாங்கும் போது விநாயகருக்கு ஒரு வஸ்திரம் எடுக்க வேண்டும். அதன் மூலம் நமக்கும் தெய்வத்திற்கும் இடையே இருக்கும் நெருக்கத்தை அதிகரிக்கலாம். ஒவ்வொருவரும் தங்களது வீடுகளுக்கு அருகில் இருக்கும் கோயிலில் இருக்கும் தெய்வ விக்கிரகங்களுக்கு ஏற்றது போல வஸ்திரங்களை வாங்கி கொடுப்பது நல்லது.

அப்படி கொடுக்க இயலவில்லை என்றால் இயலாதவர்களுக்கு தீபாவளி தினத்தில் நம்மால் முடிந்த இனிப்பு, பட்டாசு ஆகியவற்றை வாங்கி கொடுக்கலாம். இந்நிலையில் தீபாவளி அன்று தெய்வங்களின் ஆசி முழுமையாக கிடைக்க வேண்டும் என்பதற்காக அதிகாலையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நல்லெண்ணெய், சீயக்காய் வைத்து குளிக்கின்றனர்.

அப்படி குளித்தால் பாவங்கள் நீங்கி கங்கையில் குளித்ததற்கு இணையான புண்ணியம் கிட்டும். இதனை அடுத்து புத்தாடைகளை அணிந்து வீட்டில் இருக்கும் பெரியவர்களின் காலில் விழுந்து ஆசி பெறவேண்டும். பூஜை அறையில் குறைந்தது 5 அகல் விளக்கு ஏற்றி தெய்வங்களை வழிபடுவது மிகவும் நன்று.

Categories

Tech |