Categories
தேசிய செய்திகள்

பில்கிஸ் பானு பலாத்கார வழக்கு….‌ விசாரணை ஒத்திவைப்பு….சுப்ரீம் கோர்ட் திடீர் உத்தரவு….!!!

குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு நடந்த கலவரத்தின் போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு என்ற பெண் கூட்டு பாலில் பலாத்காரம் செய்யப்பட்டார். அப்போது அவருக்கு 21 வயது அவரது 3 வயது பெண் குழந்தை உள்ளிட்ட 14 பேர் அன்றைய காலத்தில் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து கைதான 11 பேருக்கும் கடந்த 2008 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்ற உத்தரவிட்டது. சிறையில் அடைக்கப்பட்ட 11 பேரையும் குஜராத் மாநில அரசு கடந்த 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று விடுதலை செய்தது. பில்கிஸ் பானு கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரை கருணை அடிப்படையில் விடுவித்த குஜராத் அரசின் முடிவுக்கு எதிராக மகுவா மொய்த்ரா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சுபாஷினி அலி ஆகியோர்கள் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுக்களை தாக்கல் செய்தனர். அதில், விடுவிக்கப்பட்ட 11 பேரும் பதிலளிக்கவும், கருணை அடிப்படையில் விடுவித்ததற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய குஜராத் அரசுக்கும் கடந்த மாதம் 9ம் தேதி உத்தரவிட்டது.

அதனை தொடர்ந்து குஜராத் அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பில்கிஸ் பானு கூப்டு பாலியல் பலாத்காரம் வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரும் நன்னடத்தையின் அடிப்படையில், மத்திய அரசின் ஒப்புதலுடன் விடுவிக்கப்பட்டனர் என்ன சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் அரசு பதில் மனு தாக்கல் செய்து உள்ளது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றவாளிகள் எந்த அடிப்படையில் நன்னடத்தையின் கீழ் விடுவிக்கப்பட்டனர். இந்த பொதுநல மனுக்கள் தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசு இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. மேலும் விடுவிக்கப்பட்ட 11 குற்றவாளிகளை இந்த வழக்கில் இணைந்து கொள்ளவும் அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து குற்றவாளிகள் 11 பேரை குஜராத் அரசு விடுதலை செய்தவருக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் மீது நடத்தப்படும் விசாரணையை வருகின்ற 29ஆம் தேதி ஒத்தி வைத்துள்ளது. மேலும் குஜராத் அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்திற்கு உரிய பதில் மனு தாக்கல் செய்வதற்கு மனத்தரர்களுக்கு போதிய நேரம் வழங்கப்படுகிறது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவில் தெரிவித்துள்ளது.

Categories

Tech |