ஆஸ்திரேலியாவின் 27வது ஒருநாள் போட்டி கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் ஒருநாள் தொடர் கேப்டனாக செயல்பட்டு வந்த ஆரோன் பிஞ்ச் ஓய்வு பெறப் போவதாக அண்மையில் அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து யார் ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள் கிரிக்கெட் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்த சூழலில் தற்போது புதிய கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த டி20 உலகக்கோப்பை தொடர் முடிவடைந்த பின் நவம்பர் மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் ஒரு நாள் தொடர் முதல் கேப்டனாக பேட் கம்மின்ஸ் செயல்படுவார் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது..
இதையடுத்து கேப்டன் ஆக நியமிக்கப்பட்டதற்குப் பின் கம்மின்ஸ் பேசியதாவது, ஆரோன் பிஞ்ச் கீழ் நான் விளையாடியதை மிகவும் ரசித்தேன். அவருடைய தலைமையின் கீழ் நான் நிறைய கற்றுக்கொண்டுள்ளேன். எங்களது ஒரு நாள் போட்டி அணியில் அதிக அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள். இது எங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டம் என்று தெரிவித்தார்.
Pat Cummins has been named Australia's 27th ODI captain 🙌 pic.twitter.com/T0p02wwjiP
— Cricket Australia (@CricketAus) October 17, 2022