Categories
மாநில செய்திகள்

”ஜெ”க்கு வெறும் பாராசிட்டமல் மட்டும் கொடுத்து இருக்காங்க: அறிக்கையில் ஷாக்கிங் ..!!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவினுடைய மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தினுடைய அறிக்கை என்பது அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அது இன்றைய தினம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு அந்த அறிக்கை என்பது தகவலாக வெளிவந்து கொண்டிருக்கிறது. பல்வேறு மர்மங்களுக்கு இதில் ஒரு வெளிச்சம் கிடைத்திருப்பதாக அறிய முடிகிறது.

இதன் அடிப்படையில் அவர் மிக மிக அடிப்படையாக 4பேரை ஆறுமுகசாமி ஆணையம் என்பது குற்றம் சாட்டுகிறது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர் வீட்டில் போயஸ் கார்டனில் மயங்கி விழுந்திருக்கிறார், அந்த மயங்கி விழுந்ததிலிருந்து தெளிவாக பலரும் விசாரணையில் வந்து தங்களுடைய வாக்குமூலத்தை பதிவு செய்து இருக்கிறார்கள். பாதுகாப்பு அதிகாரி, மருத்துவர் அவரது மகள் ப்ரீத்தா ரெட்டி கணவரை அழைத்து தான் மறைந்த முதலமைச்சருடைய ஆம்புலன்ஸ் செல்வதற்கு மருத்துவர் கேட்டிருக்கிறார்.

அது 10 நிமிடங்களில் அப்போலோ மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வந்திருக்கிறது. வந்த உடனடியாக மருத்துவமனைக்கு ஜெயலலிதா கொண்டு செல்லப்பட்டிருக்கிறார், கொண்டு செல்லப்படும் போது அவருக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது ?  ஆக்ஸிஜன் முதலில் கொடுக்கப்பட்டிருக்கிறது. மாஸ் மூலமாக ஆக்ஸிஜனை செலுத்தி, அவரை  நாற்காலியில் உட்கார வைத்திருக்கிறார்கள். அப்போது ஜெயலலிதா மயக்கத்தில் தான் இருந்திருக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இவ்வாறாக அனைத்து விவரங்களையும் பெறப்பட்ட பின்பாக 9:45 மணிக்கு தான் இந்த நிகழ்வை தடுத்திருந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் முதலமைச்சர் உடைய தனிப்பட்ட மருத்துவராக டாக்டர் சிவக்குமார் இருந்த நிலையில், சிகிச்சை அளிப்பதற்காக அவருடைய பரிசோதிக்க  வேண்டும் எனில், எதிர்கால சிகிச்சை மும்பைக்கு பரிந்துரைகளை செய்திருக்க வேண்டும்.

ஏனென்றால் அவருக்கு 2015 ஆம் ஆண்டு lv ஃபெயிலர் இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. அப்படி இருக்கும்போது 22 ஆம் தேதி அன்று மருத்துவமனைக்கு அனுமதிக்கப்படும் 3 நாளுக்கு முன்பே…  ஜெயலலிதாவிற்கு 22 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு 3 நாட்களுக்கு முன்பாக காய்ச்சல் இருந்திருக்கிறது. அப்படி காய்ச்சல் இருக்கும்போது பாராசிட்டமல் தான் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறதே தவிர வேறு எந்த சிகிச்சையும் மேற்கொள்ளப்படவில்லை.

22ஆம் தேதி காலை போயஸ் கார்டனில் இருந்து அவரை ஏன் பரிசோதிக்கவில்லை என ஆணையம் ஆனது கேள்வி எழுப்பி இருக்கிறது. அவருடைய தனிப்பட்ட மருத்துவராக இருந்தும் கூட ஜெயலலிதாவிற்கு பரிந்துரைக்காமல் அலட்சியமாக இருந்திருக்கிறார் டாக்டர் சிவகுமார் என ஆணையம் தெரிவித்திருக்கிறது.

Categories

Tech |