Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“உனது அக்காவின் புகைப்படத்தை பதிவிடுவேன்” மாணவியை மிரட்டிய இன்ஜினியர்…. போலீஸ் அதிரடி…!!!

கல்லூரி மாணவியை நடத்திய இன்ஜினியரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புதுக்கடை முள்ளுவிளை பகுதியில் இன்ஜினியரான ஆல்வின்(27) என்பவர் வசித்து வருகிறார். இவரும், கல்லூரி மாணவியும் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆல்வினின் நடவடிக்கை சரியில்லாததால் மாணவி அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டார். ஆனாலும் ஆல்வின் தொடர்ந்து மாணவிக்கு தொந்தரவு அளித்து வந்துள்ளார். இதற்கிடையில் மாணவியின் பெற்றோர் அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்து வந்தனர்.

இதனால் கோபமடைந்த ஆல்வின் காதலித்தபோது எடுத்த ஆபாச புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவேன் என கூறி மாணவியை விரட்டியுள்ளார். மேலும் மாணவியின் தங்கையை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உனது அக்காவின் புகைப்படத்தை இணையதளத்தில் பதிவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஆல்வினை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |