நகை பறிப்பில் ஈடுபட்ட மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலை அருகே மோட்டார் சைக்கிளில் கணவருடன் வந்த பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை 2 பேர் பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பரைக்கோடு பகுதியில் சந்தேகப்படும் படியாக வந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கதால் மூன்று பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாகின்(21), பர்ஜாய் (20) மற்றும் செய்யதலி(25) என்பது தெரியவந்தது. இவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள் சுற்றித்திரிந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். பின்னர் திருடும் பொருட்களை விற்பனை செய்து கிடைக்கும் பணத்தில் 3 பேரும் ஜாலியாக செலவு செய்து வாழ்க்கையை நடத்தி வந்தனர். பின்னர் மூன்று பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த 17 பவுன் தங்க நகைகளை மீட்டனர்.