தமிழ் சினிமாவில் பிரபல பாடகியாவும் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் வவலம் வருபவர் சின்மயி. இவர் ஏ.ஆர். ரகுமான் இசையில் சின்மயி பாடியுள்ள அனைத்து பாடல்களுமே செம ஹிட் என்று சொல்லலாம். ஏராளமான விருதுகளை குவித்துள்ள சின்மயி நயன்தாரா, சமந்தா, த்ரிஷா உள்ளிட்ட டாப் நடிகைகளுக்கு டப்பிங் பேசி வருகிறார். அதனைதொடர்ந்து கடந்த 2014 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான நடிகர் ராகுல் ரவீந்திரனை சின்மயி திருமணம் செய்து கொண்டார். கடந்த ஜூன் மாதம் த்ரிப்தா ஷர்வாஸ் என்ற இரட்டை குழந்தைகளுக்கு தாயானார் சின்மயி. ஒரே பிரசவத்தில் ஆண் மற்றும் பெண் குழந்தைகளை பெற்றெடுத்ததை சின்மயி சமூக வலைதளத்தில் மூலம் அறிவித்தார்.
இதனையடுத்து அவர் வாடகை தாய் மூலம் தான் குழந்தைகளை பெற்றெடுத்தார் என்ற கேள்வி எழுந்தது. அது குறித்து விளக்கம் அளித்த சின்மயி வாடகைத்தாய் மூலம் குழந்தைகளை பெறவில்லை என்றார். சமூக வலைதளவில் ஆக்டிவாக இருக்கும் சின்மயி தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறார். இந்நிலையில் சின்மயி தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ள போட்டோ இணையத்தை தெறிக்க விட்டு வருகிறது. அதாவது, தனது மகனுக்கும், மகளுக்கும் தாய்ப்பால் கொடுக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். மேலும் உலகின் மிக சிறந்த விஷயம் இதுதான் என்று முதுகு மற்றும் தோள்கள் வித்தியாசமான குரல் கொண்டவை என்று கேப்டன் கொடுத்துள்ளார். இந்த பதிவை பார்த்து நெட்டிசன்கள் ராஜமாதா சிவகாமி தேவி மொமெண்ட் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.