மறைந்த முதல்வர் ஜெயலலிதாவினுடைய மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் உடைய அறிக்கை என்பது அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அது இன்றைய தினம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு, அந்த அறிக்கையின் தகவல் வெளி கொண்டு இருக்கிறது. அந்த அறிக்கையில், 2016 டிசம்பர் ஐந்தாம் தேதி இரவு 11 மணிக்கு ஜெயலலிதா இறந்தார் என அப்பல்லோ மருத்துவமனை அறிவித்தது. சாட்சியங்கள் அடிப்படையில் ஜெயலலிதா இறந்த நேரம் 2016 டிசம்பர் 4ஆம் தேதி மதியம் 3 முதல் 3 50 மணிக்குள் என ஆணையம் அறிக்கை. ஜெயலலிதா டிசம்பர் 5ஆம் தேதி இறந்தார் என மருத்துவமனை கூறியிருந்த நிலையில் டிசம்பர் 4ஆம் தேதி இறந்தார் என ஆணையம் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் திட்டமிட்டு தாமதம் செய்யப்பட்டதா என கேள்வி எழுந்துள்ளது.
ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க விடாமல் சசிகலா தடுத்ததாக ஆறுமுகசாமி ஆணையம் பரபரப்பு குத்துசாட்டை முன் வைத்துள்ளது. 2012ல் மீண்டும் இணைந்து பிறகு ஜெயலலிதா – சசிகலா உறவு சுமுகமாக உறவு இல்லை என ஆணையம் அறிக்கையில் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளது. சமூக உறவு இல்லாததால் சுயநலத்திற்காக ஜெயலலிதாவுக்கான ஆஞ்சியோ சிகிச்சையை சசிகலா தடுத்து இருக்கலாம் என ஆணையம் அறிக்கை.
ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது வெளியான மருத்துவ அறிக்கையில் பல்வேறு முரண்பாடுகள் இருந்துள்ளன. ஜெயலலிதாவுக்கு வெஜிடேஷன், குடல் நோய் குறி உபாதைகள் உள்ளிட்டவை குறித்து மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
சசிகலாவை குற்றம் சாட்டுவதை தவிர வேறு எந்த முடிவுக்கு வர இயலாது. சசிகலா, டாக்டர் கே. எஸ் சிவக்குமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ஜே. ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த உண்மை நிலையை வெளிப்படுத்த தவறியதாக ஆணையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஜெயலலிதா மயக்கமடைந்த பிறகு நடந்த நிகழ்வுகள் சசிகலாவால் ரகசியமாக்கப்பட்டன. ஜெயலலிதா எந்த நேரத்திலும் ரீசார்ஜ் செய்யப்படலாம் என்ற ஒரு பொய்யான அறிக்கை வெளியிடப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவக் குழு ஐந்து முறை அப்பல்லோ வந்தாலும் ஜெயலலிதாவுக்கு எந்த மருத்துவ சிகிச்சை முறையும் கடைபிடிக்கவில்லை. டாக்டர் ரிச்சர்ட் பிலே உள்ளிட்ட மருத்துவர்கள் ஆஞ்சியோவுக்கு பரிந்துரைத்தும் ஜெயலலிதாவின் கடைசி மூச்சு வரை ஏன் அது நடக்கவில்லை என ஆணையம் கேள்வி எழுப்பி உள்ளது.
சசிகலா உறவினர்களால் அமெரிக்காவில் இருந்து அழைத்து வரப்பட்ட டாக்டர் சமீன் சர்மாவை ஏற்பாடு செய்தவர் யார் ? என்ற விவரமும் கடைசி வரை கூறப்படவில்லை. அமெரிக்காவில் இருந்து வந்த டாக்டர் சமீன் சர்மா ஜெயலலிதாவுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்தார். ஆனால் அது நடக்கவில்லை.
அமெரிக்க மருத்துவர் ஸ்டூவர்ட் ரசல் பரிந்துரைத்தபடியும் ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ செய்யப்படவில்லை. 2016 டிசம்பர் 5ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா இறந்தார் என அப்பல்லோ மருத்துவமனை அறிவித்தது. சாட்சியங்கள் அடிப்படையில் ஜெயலலிதா இறந்த நேரம் 2016 டிசம்பர் 4 மதியம் 3 மணி முதல் 3 50 மணிக்குள் என்று ஆணையம் அறிக்கையில் தகவல். ஜெயலலிதா டிசம்பர் 5ஆம் தேதி இறந்தார் என மருத்துவமனை கூறி இருந்த நிலையில், 4ஆம் தேதியே இழந்தார் என ஆணையம் அறிக்கையில் கூறியுள்ளதால், குழப்பம். ஜெயலலிதா மரணம் அறிவிப்பதில் திட்டமிட்டு தாமதம் செய்யப்பட்டதா என கேள்வி எழுந்துள்ளது.