டிஆர்எஸ் முன்னாள் எம்பி பாஜகவில் இணைய இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியில் இருந்து அண்மையில் விலகிய முன்னாள் எம்பி பூரா நரசய்யா பாஜகவில் இணை இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அண்மையில் தான் தேசிய அரசியலில் களமிறங்கும் விதமாக தெலுங்கானா ராஷ்டிர சமிதி எனும் பெயரை பாரதராஷ்டிர சமிதி என மாற்றியுள்ளார். மேலும் நவம்பர் 3ஆம் தேதி மூனு கோடு சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தலும் நடைபெற இருக்கிறது. இந்த சூழலில் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் பாஜகவில் இணைவது முதல்வருக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது மேலும் பாஜகவில் இணைவதற்காக நரசய்யா தில்லிக்கு பயணம் மேற்கொண்டு இருக்கிறார்.
புதன்கிழமை மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் அவர் பாஜகவில் இணை இருக்கின்றார். இந்த நிலையில் இது தொடர்பாக நரசய்யா பேசும்போது மக்கள் பிரச்சனையை நான் கட்சி தலைமையிடம் எடுத்துச் சென்ற போதெல்லாம் நிராகரிப்பை மட்டுமே சந்தித்துள்ளேன் கட்சி தலைமையை எளிதில் அணுக முடியவில்லை மேலும் மக்களிடமிருந்து கட்சி விலகி சென்றது. அதனால் டி ஆர் எஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைய முடிவு செய்து இருக்கின்றேன். பாஜகவினர் என்னை அவர்கள் கட்சியில் சேர தொடர்ந்து அழைப்பு விடுத்த காரணத்தினால் இந்த முடிவை எடுத்து இருக்கிறேன் என கூறியுள்ளார்.