Categories
மாநில செய்திகள்

#BREAKING: 2016 டிசம்பர்.4-ம் தேதியே ஜெயலலிதா மரணம்? வெளியான பரபரப்பு தகவல் …!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் விசாரணை அறிக்கையானது தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் என்பது வெளிவந்திருக்கிறது. ஜெயலலிதா மரணம் அறிவிப்பதில் திட்டமிட்டு தாமதம் செய்யப்பட்டதா ? என கேள்வி எழுப்பியிருக்கிறது ஆறுமுகசாமி ஆணையம்.

ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சையை சசிகலா தடுத்தாரா ? என்பதும் ஆணையத்தினுடைய கேள்வியாக இருக்கிறது. அது போல 2012 இல் மீண்டும் இணைந்த பிறகு சசிகலா – ஜெயலலிதா இடையே சுமுக உறவு இல்லை. சுமுக உறவு இல்லாததால் சுயலாபத்துக்காக ஜெயலலிதாவுக்கான ஆஞ்சியோ சிகிச்சையை சசிகலா தடுத்து இருக்கலாம் என ஆணையம் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.

2016 டிசம்பர் 5ஆம் தேதி இரவு 11:30 மணிக்கு ஜெயலலிதா இறந்தார் என அப்பல்லோமனை அப்பல்லோ மருத்துவமனை அறிவித்தது. சாட்சியங்கள் அடிப்படையில் ஜெயலலிதா இறந்த நேரம் 2016 டிசம்பர் 4ஆம் தேதி மதியம் 3 மணி முதல் 3 50க்குள் என அறிக்கையில் ஆணையம் தெரிவித்துள்ளது. ஜெயலலிதா டிசம்பர் 5ஆம் தேதி இறந்தார் என மருத்துவமனை கூறியிருந்த நிலையில்,  டிசம்பர் 4 ஆம் தேதியே இருந்தார் என ஆணைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் அறிவிப்பதில் திட்டமிட்டு தாமதம் செய்யப்பட்டுள்ளதா ? என கேள்வி எழுந்துள்ளது. ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க விடாமல் சசிகலா தடுத்ததாக ஆறுமுகசாமி ஆணையம் பரபரப்பு குற்ற சாட்டை முன்வைத்துள்ளது.

Categories

Tech |