Categories
மாநில செய்திகள்

#BREAKING: ஜெயலலிதாவுக்கு உரிய சிகிச்சை தரப்படவில்லை ; ஆணையம்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய ஆறுமுகசாமி ஆணையம் கொடுத்த அறிக்கை இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில், ஜெயலலிதா இறந்த தேதி குறித்து வித்தியாசமான தகவல்கள் கூறப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவில் இருந்த வந்த டாக்டர் ஜெயலலிதாவுக்கு இறுதி அறுவை சிகிச்சை பரிந்துரைத்துள்ளார்.

ஆனால் அது அவர் இறுதி மூச்சு இருக்கும் வரை நடைபெறவில்லை. எய்ம்ஸ் மருத்துவ குழு ஐந்து முறை அப்பல்லோ வந்திருந்தாலும், ஜெயலலிதா அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை,  சசிகலாவை குற்றம் சாட்டுவதை தவிர வேறு எந்த முடிவுக்கு வர இயலாது என்று ஆறுமுகசாமி  ஆணையத்தின் விசாரணையில் தெரிவித்துள்ளார்கள்.

2012 ஆம் ஆண்டு முதல் ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் இடையே சமூக உறவு இல்லை எனவும், இந்த விசாரணை மூலம் ஒவ்வொருவராகவும் விசாரித்துள்ளார்கள். எந்தெந்த தேதியில் இளவரசி விசாரிக்கப்பட்டார். இதைப்போல அங்கிருந்தவர்கள், பணியாற்றியவர்கள்,

எப்போதெல்லாம் விசாரணைக்கு அளித்துவரப்பட்டார்கள் போன்ற விஷயங்கள் எல்லாம் அதில் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஜெயலலிதாவுக்கு உடல்நல குறைவு ஏற்பட்ட உடன் மருத்துவமனைக்கு தாமதம் இன்றி அழைத்து வந்துள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

அதற்கு பிந்தைய நிகழ்வுகள் சசிகலாவால் ரகசியம் காக்கப்பட்டதாகவும் அந்த ஆறுமுகசாமி ஆணையம் விசாரணையில் சொல்லப்பட்டுள்ளது. இந்த விசாரணையின் அடிப்படையிலே எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கிறார்கள் என்பது பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

ஏற்கனவே நான்கு பேரை விசாரிக்க சொல்லி இருக்கிறார்கள். தற்போது இருக்கக்கூடிய ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், அப்போதைய செயலாளர் ராம் மோகன் ராவ். அவர் ஓய்வு பெற்றுவிட்டார். சசிகலா, விஜயபாஸ்கர் தற்போது விராலிமலை எம்எல்ஏவாக இருக்கிறார் என அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.

Categories

Tech |