Categories
Uncategorized மாநில செய்திகள்

BREAKING: ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை – தூத்துக்குடி துப்பாக்கி சூடு அறிக்கை தாக்கல்..!!

கடந்த 2018 மே 22ஆம் தேதி தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டின் விளைவாக இறப்பு, காயங்களுக்கான காரணங்கள் மற்றும் அந்த சூழ்நிலை,  அந்த சமயத்தில் சட்ட ஒழுங்கு ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்தும்,  பொது சொத்துக்கள் மற்றும் தனியார் சொத்துக்கள் சேதம் அடைந்து ஆகியவற்றை குறித்தும், அதற்கு பின்னர் நடந்த நிகழ்வுகள் குறித்தும் ஓய்வு பெற்ற  நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையமானது அமைக்கப்பட்டது.

அந்த விசாரணை ஆணையத்தின் உடைய அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அந்த விசாரணை பொறுத்தவரைக்கும் எந்த மாதிரியான விசாரணை நடைபெற்றது. அதுமட்டுமல்லாமல் அந்த நிகழ்வு நடந்தது முதல் அந்த பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் கூட அந்த விசாரணை ஆணையம் தாக்கல் செய்துள்ளது.

புகைப்படங்களோடு கூறிய விளக்கங்களும் கூட விசாரணை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆட்சியர் வளாகத்திற்குள் நடைபெற்ற அந்த துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள்,  ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த சம்பவங்களும் கூட மிக விரிவாகவே தெரிவிக்க ப்பட்டுள்ளது. இதில் அப்போது இருந்த  மாவட்ட ஆட்சியர் மீது  எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |